“இப்படி துரோகம் பண்ணிடீங்களே தம்பிகளா” சீமானுக்கு பெரும் அதிர்ச்சி! முக்கிய நிர்வாகிகள் உட்பட 27 பேர் கூண்டோடு தவெக-வில் ஐக்கியம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இப்படி துரோகம் பண்ணிடீங்களே தம்பிகளா” சீமானுக்கு பெரும் அதிர்ச்சி! முக்கிய நிர்வாகிகள் உட்பட 27 பேர் கூண்டோடு தவெக-வில் ஐக்கியம்..!!

Published

on

நாம் தமிழர் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் உட்பட 27 பேர் விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் க.ராமசுப்பிரமணி, இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நாராயணன், தொழிற்சங்க பாசறை வெ.பாலமுருகன், மாவட்டத் தலைவர் ச.சீனிவாசன் மற்றும் பொருளாளர் அ.பாலமுருகன் ஆகியோர் இந்த முக்கியப் பட்டியலில் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் தமிழக அரசின் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி முன்னிலையில் தவெகவில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர். புதியதாக இணைந்த நிர்வாகிகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி சால்வை அணிவித்து, தவெகவின் சார்பாக தனது அன்பான வரவேற்பை வெளிப்படுத்தினார்.

Advertisement

மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்கள் என்ற பாகுபாடின்றி, கட்சியில் இணைந்துள்ள அனைவரும் தங்களின் உடன்பிறந்த சகோதரர்களாகவே கருதப்படுவார்கள் என்று அமைச்சர் உறுதியளித்தார். மேலும், தவெகவில் அவர்களுக்கு உரிய மரியாதையும் தகுந்த முக்கியத்துவமும் நிச்சயம் அளிக்கப்படும் என்றும் அவர் இந்த நிகழ்வின் போது வாக்குறுதி அளித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in