LATEST NEWS
“ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் திடீர் தள்ளிவைப்பு…” அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், ஸ்மார்ட் மீட்டர் தொடர்பான டெண்டரை அடுத்த 2 மாதங்களுக்குத் தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். தொழில்நுட்பக் காரணங்கள் மற்றும் சில புதிய விதிமுறைகளைச் சேர்ப்பதற்காக இந்தத் தள்ளிவைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஸ்மார்ட் மீட்டர் மூலம் பெறப்படும் பொதுமக்களின் நுகர்வு மற்றும் தனிப்பட்ட தரவுகள் அனைத்தும் மின்வாரியத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசு கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த ஸ்மார்ட் மீட்டர்களில் ‘இ-சிம் கார்டு’ வசதி இருக்க வேண்டும் என்று டெண்டரில் புதிய நிபந்தனையைக் கேட்டுள்ளதாகவும், இதன் மூலம் தரவுப் பாதுகாப்பு மற்றும் துல்லியமான மின் நுகர்வு அளவீடு உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
