“என் குழந்தையை விட்டுடுங்க..” வீட்டிற்குள் புகுந்து ராட்சத முதலையைப் பறிமுதல் செய்த அதிகாரிகள்.. நெஞ்சை உலுக்கும் பெண்ணின் கண்ணீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் குழந்தையை விட்டுடுங்க..” வீட்டிற்குள் புகுந்து ராட்சத முதலையைப் பறிமுதல் செய்த அதிகாரிகள்.. நெஞ்சை உலுக்கும் பெண்ணின் கண்ணீர் வீடியோ..!!

Published

on

இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், முதலைக்குஞ்சு ஒன்றை எடுத்து அது சிறியதாக இருந்ததில் இருந்தே தனது சொந்தக் குழந்தை போல வளர்த்து வந்துள்ளார். அது வளர வளர, அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் ஒரு முக்கியப் பகுதியாகவே மாறிவிட்டது. இருப்பினும், காலப்போக்கில் அந்த முதலை மிகப்பெரிய அளவில் வளர்ந்ததால், அது தங்களுக்கு ஆபத்தாக முடியும் என அஞ்சிய அண்டை வீட்டாரும் உள்ளூர் மக்களும் இதுகுறித்து வனத்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்குப் புகார் அளித்தனர்.

அண்டை வீட்டாரின் புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்து முதலையைப் பறிமுதல் செய்து, அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர். பல ஆண்டுகளாகத் தன் பிள்ளையைப் போலப் பாசமாக ஊட்டி வளர்த்த முதலை, அதிகாரிகள் வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டதைக் கண்டு, அந்தப் பெண் நெஞ்சை உலுக்கும் வகையில் கண்ணீர் மல்கக் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in