LATEST NEWS
BREAKING: புயல் சின்னம் உருவானது.. தமிழ்நாட்டிற்கு ஆரஞ்ச் அலர்ட்..!!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக, வட கடலோரப் பகுதிகளில் பெய்து வந்த மழை தற்போது தென் மற்றும் உள் மாவட்டங்களை நோக்கி நகர்ந்துள்ளது. தீவிரமடைந்து வரும் இந்த வானிலை அமைப்பால், தூத்துக்குடி, நெல்லை, மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன், இடி மின்னலோடு கூடிய மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனுடன், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேலும் பல மாவட்டங்களுக்கும் பரவலாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. கடலில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
