LATEST NEWS
நெஞ்சை உலுக்கும் சோகம்..! சாத்தூரில் விடிய விடிய வெளுத்த கனமழை – நள்ளிரவில் வீடு இடிந்து 12-ஆம் வகுப்பு மாணவி பரிதாப பலி.!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று மாலையில் திடீரென பலத்த கனமழை தொடங்கியது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த கனமழையினால் நகரின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததுடன் சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்தக் கனமழையின் காரணமாக, சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை கிராமத்தில் நேற்று இரவு ஒரு வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவியான முத்துச்செல்வி என்பவர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சுவர் இடிந்து விழுந்த இந்த விபத்தில் மாணவியின் தாயார் சோலையம்மாள் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
