LATEST NEWS
“உஷார் நிலைல இருங்க..” எழிலகம் கட்டுப்பாட்டு மையத்தில் திடீர் விசிட்..! 17 மாவட்ட கலெக்டர்களுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு..!!
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்தபடியே தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கப்பட்டுள்ள 17 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த ஆய்வின் போது, மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயமுள்ள இடங்களில் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், நிவாரண முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் அவசர மருத்துவ வசதிகளை உடனடியாக தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
