CRIME
வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி.. திடீரென வீட்டில் கேட்ட அலறல் சத்தம்… பிணமாக கிடந்த தாய்,மகள்.. மதுபோதையில் கணவர் செய்த பயங்கரம்,,,!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே உள்ள கிளன்மேரி எஸ்டேட் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக எஸ்டேட் தொழிலாளியான பிரின்ஸ் (36) என்பவர் தனது மனைவி மற்றும் மாமியாரை கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்துள்ளார். இவரது மனைவி பிரியங்கா (30) வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் சொந்த ஊருக்குத் திரும்பி தனது தந்தை இஸ்ரவேல் மற்றும் தாய் நேசம் (62) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரியங்காவின் வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, பிரியங்காவும் அவரது தாய் நேசமும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளனர். மேலும், பிரியங்காவின் தந்தை இஸ்ரவேல் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததால், அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பீர்மேடு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், குடும்பப் பிரச்சினை காரணமாக மதுபோதையில் வீட்டிற்கு வந்த பிரின்ஸ், மனைவியுடன் மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடிய பிரின்ஸை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்; இந்த கொடூரக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
