LATEST NEWS
BREAKING: ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார் நவீன் சிவக்குமார்..!!
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி வீராங்கனையான நவீன் சிவகுமார் ஆடவர் தனிநபர் பேட்மிண்டன் (SL4) பிரிவில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்தோனேசியாவின் முன்னணி வீரரான ஃபெர்டி செட்டியாவானை 21-9, 21-17 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.
முன்னதாக, இவர் ஆடவர் இரட்டையர் பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்த நிலையில், தற்போது தனிநபர் பிரிவில் தங்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளார். இவரது இந்த அசாத்திய திறமையையும், தொடர் சாதனைகளையும் பாராட்டி பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
