LATEST NEWS
“பொன்னியின் செல்வன் பாகம் 2″….. எப்போது ரிலீஸ்?…. வெளியான முக்கிய தகவல்….!!!
பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் தயாரான பொன்னியின் செல்வன் படத்தில் முதல் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உலகம் முழுவதும் 5500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றது. முதல் மூன்று நாட்களில் மட்டும் 230 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் பட குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியுள்ளனர். அடுத்து பொன்னியின் செல்வன் பாகம் 2 எப்போது வரும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர்.
இந்த படத்துக்காக படப்பிடிப்பு தொடங்கும் முன்பே நடிகர்கள் நீண்ட தலை முடி, தாடி வளர்த்து, கடும் உடற்பயிற்சிகள் செய்து தோற்றத்தை மாற்றியிருந்தனர். முதல் பாகம் வெளியான பிறகு இரண்டாம் பாகத்திற்கு படப்பிடிப்பு நடத்தினால் மீண்டும் அவர்களின் பழைய தோற்றத்தை கொண்டு வருவது கஷ்டம் என்று முதல் பாகத்தை எடுக்கும்போது இரண்டாவது பாகத்தையும் முழுமையாக எடுத்து முடித்து விட்டார் மணிரத்தினம்.
தற்போது இரண்டாம் பாகம் படத்திற்கு கிராபிக்ஸ், ரெக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் மட்டுமே நடந்து வருகின்றது. இந்த பணிகள் முடிந்ததும் ரிலீஸ் செய்தியை அறிவிக்க உள்ளனர். முதல் பாகம் வெளியாகி ஆறு முதல் ஒன்பது மாதத்திற்குள் இரண்டாவது பாகம் வெளியாகும் என்று தெரிவித்த நிலையில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
