CINEMA
தங்கலான் ரிலீஸ்க்கு முன் ரூ.1கோடி டெபாசிட் செய்யணும்… ஐகோர்ட் உத்தரவு…!!!
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் இசையமைத்துள்ளார் . இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. இதனை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் “தங்கலான்” பட தயாரிப்பாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதாவது அர்ஜூன் லால், சுந்தர்லால் ஆகியோரிடம் பெற்ற கடனைத் திருப்பி கொடுக்காத விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில், ஆக.15ஆம் தேதி தங்கலான் படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பாக, ரூ1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.