17 கைதிகள் தப்பிய எதிரொலி… சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தூக்கியடிப்பு..! தமிழக அரசின் அதிரடி ஆக்ஷன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

17 கைதிகள் தப்பிய எதிரொலி… சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தூக்கியடிப்பு..! தமிழக அரசின் அதிரடி ஆக்ஷன்..!!

Published

on

தேனி தேக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் முதன்மை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சிறைத்துறை ஏடிஜிபியாக ஐபிஎஸ் சங்கரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், கடந்த திங்கட்கிழமை இரவு சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடினர். மனித தவறே இச்சம்பவத்திற்குக் காரணம் எனத் தெரியவந்ததால், தலைமைக் காவலர்கள் உள்ளிட்ட 9 சிறைக் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார். மேலும், இனி கைதிகள் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றால் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கலாம் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Advertisement

தப்பியோடிய 17 கைதிகளும் மீண்டும் கைது செய்யப்பட்ட போதிலும், சமீபத்தில் சென்னை புழல் சிறையிலும், அதைத் தொடர்ந்து தற்போது தேனி மாவட்ட சிறையிலும் கைதிகள் தப்பியோடிய சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. இதனால் சிறைத்துறையின் பாதுகாப்பு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது இந்த பணியிட மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in