CINEMA
ரிலீஸுக்கு முன்பாகவே பல கோடிக்கு வியாபாரமான புஷ்பா-2…. மகிழ்ச்சியில் படக்குழு…!!

புஷ்பா படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா-2’ திரைப்படம். இந்த திரைப்படம் ரிலீசுக்கு முன்னதாகவே 1,000 கோடி ரூபாயை தாண்டி வியாபாரமாகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தியேட்டர் உரிமத்தில் ரூ.640 கோடி, OTT உரிமத்தில் ரூ.275 கோடி பிசினஸ் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோக, பாடல்களின் உரிமமாக ரூ.65 கோடி மற்றும் சேட்டிலைட் உரிமமாக ரூ.85 கோடி என மொத்தம் ரூ.1,065 கோடிக்கு வியாபாரமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.