LATEST NEWS
BREAKING: பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500! தவெக அரசின் முதல் பட்ஜெட் ரகசியம் கசிந்தது..!!
தமிழ்நாட்டின் 2026-27-ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தாக்கல் செய்யப்படவிருக்கும் இந்த முதல் பட்ஜெட் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தின் போது தவெக தலைவரால் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகளாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிதியமைச்சகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் நிதியுதவி வழங்கும் ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ மற்றும் ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது. மாநிலத்தின் தற்போதைய கடன் சுமை மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, இந்த நலத்திட்டங்களை முதற்கட்டமாக தகுதியுள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளித்தோ அல்லது அடுத்தடுத்த கட்டங்களாகவோ செயல்படுத்துவது குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
