LATEST NEWS
பெங்களூரு அதிர்ச்சி: அழுதால் வாஷிங் மெஷினில் அடைப்பு… குழந்தைகள் காப்பகத்தில் நடந்த கொடூர சித்ரவதை..!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில், குழந்தைகள் அழுதாலோ அல்லது குறும்பு செய்தாலோ அவர்களை வாஷிங் மெஷினுக்குள் அடைத்து வைத்தும், கழிப்பறைக்குள் பூட்டிவைத்தும் கொடுமைப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஊழியர்கள் குழந்தைகளை இரக்கமின்றி சித்ரவதை செய்து வந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட காப்பகத்தின் ஐந்து பெண் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தைகளைத் துன்புறுத்திய அந்த ஊழியர்களைக் கைது செய்து, இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
