BREAKING: செஞ்சி அருகே சாக்லேட் சாப்பிட்ட 18 மாணவர்கள் மயக்கம்… விழுப்புரத்தில் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: செஞ்சி அருகே சாக்லேட் சாப்பிட்ட 18 மாணவர்கள் மயக்கம்… விழுப்புரத்தில் அதிர்ச்சி..!!

Published

on

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி – விழுப்புரம் சாலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதையொட்டி அவர் சக மாணவர்களுக்கு சாக்லேட்டுகளை வழங்கியுள்ளார். அந்த சாக்லேட்டுகளைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, 18 மாணவர்களுக்கு அடுத்தடுத்து திடீரென வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் உருவானது.

Advertisement

மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதை கவனித்த பள்ளி ஆசிரியர்கள், உடனடியாக அவர்களை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசாரும், கல்வித்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து சாக்லேட் கெட்டுப்போயிருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in