BREAKING: லஞ்சம் வாங்கிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்..? சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: லஞ்சம் வாங்கிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்..? சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு..!!

Published

on

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகியே சென்னை உயர் நீதிமன்றத்தில் (ஐகோர்ட்) அதிரடியாக வழக்குத் தொடர்ந்துள்ளார். தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளரான எம்.ஞானசௌந்தரி என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் மீது பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, மகளிர் நீதிமன்ற சிறப்பு வழக்கறிஞர் உள்ளிட்ட பதவிகளுக்குப் பட்டியல் இனத்தைச் சேர்ந்த தான் விண்ணப்பித்திருந்ததாக ஞானசௌந்தரி குறிப்பிட்டுள்ளார். ஆனால், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவதற்கு முன்பாகவே வாட்ஸ்அப்பில் இறுதி நியமனப் பட்டியல் வெளியாகி தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். ஒரு அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் பரிந்துரையின் பேரில் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கே இந்த அரசுப் பதவிகள் வாரி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்

Advertisement

தன் ஆட்சியில் ஊழலை அனுமதிக்க மாட்டேன் என்று முதலமைச்சர் விஜய் கூறிவரும் நிலையில், அவரது அமைச்சரவையில் உள்ள முக்கியத் தலைவரே இத்தகைய லஞ்ச முறேகடுகளில் ஈடுபட்டிருப்பது தவெக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த வழக்கறிஞர் நியமன அறிவிப்பாணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், தகுதி வாய்ந்த தங்களுக்கு முறையான வாய்ப்பளிக்க முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஞானசௌந்தரி கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in