LATEST NEWS
மன்னர் போல வலம் வந்தாரு.. கொளத்தூரில் ஸ்டாலினை நம்ப வச்சி ஏமாத்திட்டாரு… சேகர் பாபாவை ஓரங்கட்டும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததற்கு, அக்கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.கே.சேகர்பாபுவின் சர்வாதிகாரப் போக்கும் தவறான நடவடிக்கைகளுமே முதன்மைக் காரணம் என முன்னாள் எம்.எல்.ஏ ஐ.பரந்தாமன் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சென்னையில் மன்னரைப் போல வலம் வந்த சேகர்பாபு, கட்சித் தலைமையிடம் கொளத்தூரில் ஸ்டாலின் பிரம்மாண்ட வெற்றி பெறுவார் என நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக அவர் ஆவேசப்பட்டுள்ளார்.
தலைவரின் இந்த எதிர்பாராத தோல்வியால் திமுக தலைமையோடும் அதன் குடும்பத்தினரோடும் சேகர்பாபுவுக்கு இருந்த நெருக்கம் முற்றிலும் குறைந்து, அவர் தற்போது கட்சியில் தீவிரமாக ஓரங்கட்டப்பட்டு வருகிறார். இதற்கு நேர்மாறாக, சேகர்பாபுவுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஐ.பரந்தாமன் அறிவாலயத்தில் அமர்ந்து பிரஸ்மீட் கொடுக்கும் அளவிற்குத் திமுகவில் முக்கியத்துவம் பெற்று லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.
சென்னை மாவட்டத் திமுக அரசியலில் பரந்தாமனின் இந்த அசுர எழுச்சியும், சேகர்பாபுவின் மீதான தலைமை மற்றும் தொண்டர்களின் கடும் அதிருப்தியும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் தோல்விக்குப் பிறகு சென்னை திமுக கோட்டையைத் தன்வசப்படுத்த இரு தரப்பிற்கும் இடையே திரைமறைவில் நிலவும் அதிகாரப் போட்டி தற்போதைய சூழலில் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
