மயோசிடிஸ் சிகிச்சைக்கு பிறகு வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சமந்தா…. தீயாய் பரவும் வீடியோ….!!! - cinefeeds
Connect with us

VIDEOS

மயோசிடிஸ் சிகிச்சைக்கு பிறகு வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சமந்தா…. தீயாய் பரவும் வீடியோ….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அதற்காக தீவிர சிகிச்சையும் எடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா மற்றும் சகுந்தலம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

Advertisement

சில காலங்களாக சிகிச்சை பெற்று வந்த சமந்தா தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார். இந்நிலையில் சமந்தா ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அதனைப் பார்த்து ரசிகர்கள் சமந்தாவா இது என்று கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

https://twitter.com/sowmiya_vj/status/1623542276113965057

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in