விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அண்மையில் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியை நிறைவு பெற்றாலும் அதன் தாக்கம் இன்று வரை இருந்து வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற அசீம் பல இடங்களில் தனது மகனின் பிரிவு குறித்து கூறி வந்தார்.
பிக் பாஸ் வீட்டில் கூட அவரின் மகன் வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் வரவில்லை. இறுதியாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் என அறிவித்த போதும் அவரின் மகன் வரவில்லை. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சிக்கு அசீம் அன்பு மகன் வரவழைக்கப்பட்டுள்ளார். அங்கு அவள் தன்னுடைய மகனை கட்டி அணைத்து முத்தமிட்டுள்ள நிலையில் அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.