#image_title

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

தற்போது கீர்த்தி சுரேஷ் மாமன்னன் மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதனிடையே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். அவ்வகையில் தற்போது வித்தியாசமான முறையில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Keerthy Suresh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@keerthysureshofficial)