தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. அது மட்டும் அல்லாமல் தமிழ் சினிமாவில் ஃபிட்னஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நடிகரும் இவர்தான். ஒரு திரைப்படத்திற்காக தனது தோற்றத்தை மாற்ற அதிக ஒர்க்கவுட் செய்வார்.
இவரின் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்த போது அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என பலரும் பாராட்டினர். தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சூர்யா 42 திரைப்படத்திற்காக சூர்யா வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
https://twitter.com/SuriyaFansClub/status/1624373122085552130