LATEST NEWS
தமிழ்நாட்டுப் பெண்களுக்கு இனி முழுப் பாதுகாப்பு… ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையை நேரில் களம் இறக்கிய முதல்வர்…பெண்களின் பாதுகாப்பே முக்கியம்…எழும்பூர் மைதானத்தில் அரங்கேறிய ‘தளபதி’ சாகசம்…!
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ வாகனங்களின் சேவையை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் பெண்களின் பாதுகாப்புக்காக அவர் கையெழுத்திட்ட முக்கிய கோப்புகளில் ஒன்றான இத்திட்டத்தின் தொடக்க விழா, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இத்தொடாரான நிகழ்வின் போது, முதலமைச்சர் விஜய் அவர்களே நேரடியாக காரை ஓட்டிச் சென்று இச்சேவையைத் தொடங்கி வைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு எப்போதும் முன்னுரிமை கொடுக்கும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், “இந்த சிங்கப்பெண் அதிரடிப்படைக்காக முதற்கட்டமாக அரசு சார்பில் ₹350 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; அடுத்த கட்டமாக இதில் 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன” என்றும் அவர் அறிவித்தார். பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு தரும் வகையில், அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளும் நவீன ரோந்து வாகனங்களும் இந்தச் சிறப்புப் படைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
விழாவின் முத்தாய்ப்பான தருணமாக, யாரும் எதிர்பாராத வகையில் அதிரடிப்படை காரின் ஓட்டுநர் இருக்கையில் முதலமைச்சர் விஜய்யே அமர்ந்து, காரைக் கம்பீரமாக ஓட்டிச் சென்று இந்தச் சேவையைத் தொடங்கி வைத்தார். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் மருத்துவத் துறை வாகனங்களை அவரே ஓட்டிச் சென்று அலாதியாகத் தொடங்கி வைத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதே பாணியில் கார் ஓட்டி அசத்தியுள்ளார். பெண்களின் பாதுகாப்புக்கான ஒரு முக்கிய திட்டத்தை முதலமைச்சரே நேரில் கார் ஓட்டித் தொடங்கி வைத்திருப்பது பொதுமக்களிடையேயும், குறிப்பாகப் பெண் காவலர்களிடையேயும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
