#image_title

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.  சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா மற்றும் சகுந்தலம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

சில காலங்களாக சிகிச்சை பெற்று வந்த சமந்தா தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார். சமீபத்தில் உடல் எடையை குறைத்தபடி புகைப்படங்கள் மற்றும் ஒர்க்கவுட் செய்யும் வீடியோக்களை அவர் பகிர்ந்த நிலையில் தற்போது சிரித்தபடி செல்பி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

9a1d8fdc 7bbd 4ee1 954b a34e31ea2aca