தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஸ்வேதா மோகன்.
ஸ்வேதா மோகன் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் கொண்டவர். தற்போது வரை அந்த ஆர்வம் குறையாமல் இருந்து வருகிறார்.
இவர் தமிழில் ஏழாம் அறிவு திரைப்படத்தில் எம்மா எம்மா என்ற பாடலை பாடியதன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அது மட்டுமல்லாமல் அச்சம் அச்சம் இல்லை மற்றும் குச்சி குச்சி ராக்கம்மா பல சூப்பர் ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
இவர் பாடிய பாடல்கள் இந்து மக்கள் மனதில் மறவாத இடம் பிடித்துள்ளன.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் பாடலை பாடிய அசத்தியுள்ளார்.
இவர் தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடுவராக பணியாற்றி வருகின்றார்.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதுவரை 50க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல் பாடியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக ஸ்வேதா மோகன் பங்கு பெற்ற வருகிறார்.
இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அஸ்வின் சாஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது shresta என்ற ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ஸ்வேதா மோகன் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் குழந்தையின் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தற்போது ஸ்வேதா மோகனின் கியூட்டான திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.