LATEST NEWS
சீமானுக்கு திமுக ஆதரவா..? “தேர்தல் வரட்டும் பாப்போம்..” ஸ்டாலினின் மழுப்பல் பதிலால் கிளம்பிய புதிய புயல்..!!
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் இரட்டை இலை சின்னம் நிற்பதே நியாயமாக இருக்கும் என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார். அதே வேளையில், அத்தொகுதியில் போட்டியிட உள்ளதாக சீமான் ஏற்கெனவே அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், சீமான் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற பேச்சும் அரசியல் களத்தில் எழுந்துள்ளது. முன்னதாக, சீமானை திமுக ஆதரிக்கிறதா என்ற கேள்விக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அது குறித்துப் பேசலாம் என மு.க. ஸ்டாலின் மழுப்பலாகப் பதிலளித்திருந்தார்.
