பழைய எண்ணெயில் ஸ்வீட் செய்றாங்களா..? ஒரே போன் காலில் நடவடிக்கை… கடைகளுக்கு செக் வைத்த அரசு..! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பழைய எண்ணெயில் ஸ்வீட் செய்றாங்களா..? ஒரே போன் காலில் நடவடிக்கை… கடைகளுக்கு செக் வைத்த அரசு..! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க..!!

Published

on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பான உணவுப் பொருட்களை வாங்குவதை உறுதி செய்யும் வகையில் வணிகர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, உணவுகளில் அரசு அனுமதித்த கலர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், ஈக்கள் மற்றும் பூச்சிகள் இல்லாத சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்கள் விற்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவுக்கு பயன்படுத்தப்படும் நெய் மற்றும் எண்ணெய் விவரங்களை வாடிக்கையாளர்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும். பழைய எண்ணெய்யுடன் புதிய எண்ணெய்யை எக்காரணம் கொண்டும் சேர்க்கக் கூடாது. இந்த விதிகளை மீறும் வணிகர்கள் மீது பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in