LATEST NEWS
“நாங்க இந்த உலகத்தை விட்டுப் போறோம்…” நிறுவனத்திற்கு ஊழியர் அனுப்பிய அதிர்ச்சி மின்னஞ்சல்… குருகிராமில் தம்பதி பிணமாக மீட்பு..!!
குருகிராம் நகரில் வசித்து வந்த ஐடி துறை அதிகாரி ஒருவர், புதன்கிழமை காலை 7 மணியளவில் தனது நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மின்னஞ்சலில் “நாங்கள் இந்த உலகத்தை விட்டுச் செல்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டிருந்ததுடன், தனது பெற்றோர் மற்றும் வீட்டு உரிமையாளரின் தொலைபேசி எண்களையும் பகிர்ந்து அவர்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
ஊழியரின் அந்த விசித்திரமான மற்றும் மிரட்சியூட்டும் மின்னஞ்சலைக் கண்டு அதிர்ந்துபோன நிறுவன அதிகாரிகள், உடனடியாக அவரது பெற்றோர் மற்றும் வீட்டு உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது, அந்த ஐடி அதிகாரியும் அவரது மனைவியும் தங்களது குடியிருப்பில் சடலமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கால் தவறி விழுந்ததோ அல்லது தற்கொலை செய்துகொண்டதோ போன்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஐடி அதிகாரியின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரையும், உற்றார் உறவினர்களையும், சக ஊழியர்களையும் ஆழ்ந்த சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
