மர்ம மரணம்..! உள்பக்கமாக பூட்டப்பட்ட கதவு.. திறந்ததும் அலறிய ஹோட்டல் ஊழியர்கள்.. ஜகூசி தொட்டியில் கிடந்த சடலம்.. சிசிடிவி ஆய்வில் வெளிவந்த பகீர் தகவல்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மர்ம மரணம்..! உள்பக்கமாக பூட்டப்பட்ட கதவு.. திறந்ததும் அலறிய ஹோட்டல் ஊழியர்கள்.. ஜகூசி தொட்டியில் கிடந்த சடலம்.. சிசிடிவி ஆய்வில் வெளிவந்த பகீர் தகவல்கள்..!!

Published

on

குரு கிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 35 வயதான பிரஞ்சில் பாதக் எனும் பொறியாளர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவைச் சேர்ந்த இவர், இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய இவர், ரிஷிகேஷிற்குச் சென்றுவிட்டு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தனது நண்பரை வழி அனுப்பி வைத்துள்ளார். பின்னர், இரவைக் கழிப்பதற்காக குரு கிராமில் உள்ள செக்டார்-53 இல் அமைந்திருக்கும் ‘ஓர்சம்’ ஹோட்டலில் அறை எண் 302-ஐ பதிவு செய்து தங்கியுள்ளார்.

ஹோட்டல் அறையில் தங்கிய பிராஞ்சில் நீண்ட நேரமாக வெளியில வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் சோதனையிட்டனர். அப்போது அவர் அறையில் இருந்த ஜகூசி வாட்டர்பாத் தொட்டியின் தண்ணீரில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே வரவழைக்கப்பட்ட மருத்துவர் அவரைப் பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார். தகவலறிந்து வந்த செக்டார்-53 காவல் துறையினரும் தடயவியல் நிபுணர்களும் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அறையின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததும், CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில் அறைக்குள் எந்தவொரு வெளிநபரும் வரவில்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

பிராஞ்சில் பாதக் குளிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதா அல்லது கால் நழுவி தண்ணீரில் மூழ்கி இறந்தாரா என்ற கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பக்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும், அறையிலிருந்து 10 மாத்திரைகளில் 6 மாத்திரைகள் பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்து அட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த மருந்துகள் மற்றும் உடலின் மாதிரிப் பொருட்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பிராஞ்சிலின் மருத்துவ வரலாறு மற்றும் உறவினர்களின் வாக்குமூலங்கள் மூலமாகவும் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in