வீட்டை விட்டு வெளியேற சொன்ன விஜயா…! பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை…. என்ன ஆகப்போகுதோ?…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

வீட்டை விட்டு வெளியேற சொன்ன விஜயா…! பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை…. என்ன ஆகப்போகுதோ?…!!!

Published

on

விஜய் டிவியின் தற்போது விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசைதான். இதற்கு என்று தனியாக ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள். சீரியல் ப்ரோமோ வந்தவுடன் அதனை உடனே சென்று பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கின்றது.

#image_title

கடந்த வாரம் முத்துவை வைத்து எப்படியாவது பிரச்சினையை கிளப்பி விட வேண்டும் என்று சுருதி வீட்டாரும், ரோகிணியும் பிளான் செய்து கொண்டிருக்க அப்படி ஒரு பிரச்சினையை உருவாக்கவிடாமல் தடுத்துவிட்டார் முத்து. ஆனால் மீனாவை வைத்து புதிய பிரச்சினை ஒன்று உருவானது.

#image_title

மீனா ஸ்ருதியின் செயினை திருடி விட்டதாக ஸ்ருதியின் அப்பா அம்மா புதிய பிரச்சினையை கிளப்ப இதனை பார்த்து கோபமடைந்த முத்து ஸ்ருதியின் அப்பாவை அடித்து விடுகிறார். இதனால் ரவியும் சஸ்ருதியும் மீண்டும் வீட்டிற்கு வர மறுத்து விடுகிறார்கள். இந்நிலையில் வீட்டிற்கு வந்த முத்து மற்றும் மீனாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி கூறுகிறார் விஜயா. இவர்கள் வெளியில் சென்றால் தான் ரவியும் வருவார்கள் என்று கூறும் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in