“மகனுக்கு முக்கிய பதவி கொடுக்கணும்” செம பிளான் வைத்திருந்த ஸ்டாலின்… மொத்தத்தையும் தவிடுபொடியாக்கிய முதல்வர் ஸ்டாலின்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மகனுக்கு முக்கிய பதவி கொடுக்கணும்” செம பிளான் வைத்திருந்த ஸ்டாலின்… மொத்தத்தையும் தவிடுபொடியாக்கிய முதல்வர் ஸ்டாலின்..!!

Published

on

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அரசு நிர்வாகப் பணிகளில் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி அவரை மேலும் வலுப்படுத்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் தலைகீழான திருப்பத்தை ஏற்படுத்திய நிலையில், திமுக ஆட்சியை இழந்து எதிர்க்கட்சி வரிசைக்குத் தள்ளப்பட்டது. இதன் விளைவாக, தற்போதைய அரசியல் சூழலில் உதயநிதி ஸ்டாலின் எதிர்பாராத விதமாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அரசு நிர்வாகத்தை வழிநடத்த வேண்டிய சூழலில் இருந்து, தற்போது ஆளுங்கட்சியைத் தட்டிட்கேட்கும் முக்கியப் பொறுப்புக்கு வந்துள்ள உதயநிதி ஸ்டாலின், தனது அரசியல் பேச்சுகளிலும் விவாதத் திறனிலும் இன்னும் முதிர்ச்சியடைய வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சட்டமன்றத்திற்குள்ளும் வெளியேயும் புதிய ஆளுங்கட்சியை எதிர்கொள்ள, சாதாரண பிரச்சாரப் பேச்சுகளைத் தாண்டி, ஆழமான தரவுகளுடன் கூடிய அரசியல் பேச்சுகளை அவர் வளர்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement

குறிப்பாக, தமிழக முதலமைச்சர் விஜய்யை வெறும் ‘நடிகர்’ என்று மட்டுமே உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய தொடர்ச்சியான மற்றும் மேலோட்டமான விமர்சனங்கள் முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே ஒருவித அனுதாப அலையை உருவாக்கி, அக்கட்சிக்கு மேலும் சாதகமாகவே முடியும் என்று அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். கலைத்துறையில் இருந்து வந்து சாதித்த முந்தைய தலைவர்களைப் போல விஜய்யையும் மக்கள் அரசியல் தலைவராகப் பார்க்கத் தொடங்கிவிட்டதை உணர்ந்து, திமுக தனது அரசியல் உத்திகளை மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் பார்வையாக உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in