நான் வாங்கிய முதல் சம்பளம்….. பழைய நினைவுகளை பகிர்ந்த சூர்யா….. வைரலாகும் பதிவு….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நான் வாங்கிய முதல் சம்பளம்….. பழைய நினைவுகளை பகிர்ந்த சூர்யா….. வைரலாகும் பதிவு….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் சூர்யா. ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் இவர் ஆரம்ப காலகட்டத்தில் மிகுந்த அவமானங்களுக்குப் பிறகு இந்த நிலைமையை அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முதன் முதலாக புகழ்பெற்ற மணிரத்தினம் தயாரிப்பில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமான இவர் அந்த திரைப்படத்திலேயே பல திட்டுகளை வாங்கியுள்ளார்.

மேலும் இவருக்கு நடிக்க தெரியவில்லை என்று பல அவமானங்களை சந்தித்துள்ளார். என்னதான் இவரது தந்தை சினிமாவில் இருந்திருந்தாலும் இவரால் பெரிய அளவிற்கு புகழ் பெற முடியவில்லை. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தனது நடிப்பை மெருகேற்றி ஒரு தலைசிறந்த நடிகனாக இப்போது இருக்கிறார்.

Advertisement

25 வருடங்களில் ஐம்பது படங்கள் நடித்த சூர்யா பல விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் கூட சுரரைப் போற்று திரைப்படத்தில் நடித்த இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு அந்த விருதை இவர் குடும்பத்துடன் சென்று டெல்லியில் குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

இந்த புகைப்படத்தை ஷேர் செய்த இவர் இந்த விருதினை என் அன்பான ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த பல வருடங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் அவர் பேசிய சில விஷயங்கள் வருகிறது. அதாவது எனது அப்பாவை போல் நானும் சினிமா துறையில் நடிக்க வேண்டும் என எனக்கு ஆசை இல்லை. ஆடை ஏற்றுமதி வேலை செய்த நான் என் முதல் மாத சம்பளமாக 736 ரூபாயை பெற்றேன். அதுவும் ஒரு நாளில் 18 மணி நேரம் உழைத்து அந்த சம்பளத்தை பெற்றுக் கொண்டேன் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in