#image_title

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான காற்றுக்கென்ன வேலி சீரியல் 500 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கல்லூரி கால கதை களத்தில், குடும்பம், நண்பர்கள்,காதல் மற்றும் லட்சியம் என சில எமோஷன்கள் கலந்த கதைக்களமாக மக்கள் மத்தியில் இந்த சீரியல் பேராதரவை பெற்று வருகிறது.

இந்த சீரியலில் பிரியங்கா மற்றும் சுவாமிநாதன் இருவரும் ஜோடியாக நடித்து வருகிறார்கள். அதேசமயம் சீரியலில் சாரதா என்ற கதாபாத்திரத்தில் ஜோதி என்பவர் நடித்து வந்தார்.

இவரின் நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தொடரில் இருந்து அவர் தற்போது விலகி இருப்பதாகவும் அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹர்ஷா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Tamil Serials இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tamilserialexpress)