தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவருக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா நடித்து வருகின்றார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது சாமியார் வேடத்தில் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தமன்னா சாமியாராக மாறிவிட்டாரா என்று அதிர்ச்சி அடைந்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். அந்த வீடியோவில் ஈஷாவில் உள்ள லிங்க பைரவி கோவிலின் பெருமைகள் குறித்து சமமாக கூறியுள்ளார். சமீப காலமாக ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வரும் தமன்னா தற்போது இந்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அதை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க