விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் புதிய புதிய தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. பல வருடங்களாக வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. அதற்கு மிகப்பெரிய காரணம் என்னவென்றால் நீயா நானா நிகழ்ச்சியின் ஆங்கர் கோட் கோபிநாத் என்று சொல்லலாம். மொத்த நிகழ்ச்சியையும் தனது கட்டுக்குள் வைத்து பிரமிக்க வைக்கும் வகையில் நடத்துவார்.

நிகழ்ச்சியில் விவாதங்கள் அனைத்தையும் முடித்த பிறகு தனக்கு உரிய பாணியில் பைனல் டச் கொடுப்பார்.  இதனிடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நல்லதா நாலு விஷயம் பேசுவோம் என சொல்லி அவர் மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.அதே சமயம் அவரின் பர்சனல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் வெளிநாடு சுற்றுலா சென்று அங்கு கைதிகளை அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலைகள் கொண்ட தனித்தீவு ஒன்று இருந்துள்ளது. அந்தத் தீவு அல்கட்ராஸ் என்று அழைக்கப்படுகின்றது. அந்த இடத்திற்கு சென்று சிறைச்சாலையில் உள்ள சில இடங்கள் குறித்து கோபிநாத் மக்களுக்கு ரிவ்யூ கொடுத்துள்ளார். அதனைப் பார்த்த பலரும் சிறைக்குள் சென்று இருக்கும் கோபிநாத்தை பார்த்து பதறி உள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/wCu0Bwzzm1k