விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கோபிநாத் என்ற ஒரே தொகுப்பாளர் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் சுவாரசியமான தலைப்புகள் கொண்டு பரபரப்பான விவாதத்துடன் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் கோபிநாத்திற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சாள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி அதில் பல வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் கோபிநாத்திற்கு வெண்பா என்ற ஒரு மகள் உள்ளார். அவருக்கு கிட்டார் வாசிப்பது மிகவும் பிடிக்கும். அப்படி வாசிக்கும் போது எடுத்த வீடியோவை கோபிநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
Instagram இல் இந்த இடுகையைக் காண்க