CRIME
“அய்யோ காலில் ஏதோ குத்துகிறது..” எக்ஸ்ரே-வில் பார்த்த மருத்துவருக்கே தூக்கி வாரிப்போட்ட அந்த மர்ம உண்மை.. பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..நடுங்க வைக்கும் சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஹைதர் டவர்ஸ் குடியிருப்பு வளாகத்தின் 5-வது மாடி மொட்டை மாடியில் நடந்து சென்று கொண்டிருந்த சாய்ரா கான் என்ற பெண் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடியில் உலாவிக்கொண்டிருந்த போது தனது காலில் ஏதோ குத்துவது போன்ற உணர்வு அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்ட போது, அவரது காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தடய அறிவியல் ஆய்வக குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முக்கிய ஆதாரங்களைச் சேகரித்ததுடன், இந்தத் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை சீல் வைத்துள்ளனர். எங்கிருந்து இந்தத் துப்பாக்கிக் குண்டு வந்தது, யாரேனும் திட்டமிட்டு சுட்டார்களா அல்லது தவறுதலாக இந்தச் சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் போபால் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
