LATEST NEWS
தவெக – பாமக புதிய கூட்டணி.. அப்செட்டில் வெளியேற ரெடியாகும் திருமா..!!
தவெக அமைச்சரவையில் இடம்பெற பாமக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நகர்வால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, திமுகவின் தோல்விக்கு SIR தான் காரணம் எனக் கூறி, அந்தத் தரப்பிற்கு ஆதரவாக அவர் பேசியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மற்றொருபுறம், கம்யூனிஸ்ட் கட்சிகள் முரண்டு பிடித்து வரும் நிலையில், பாமகவுக்கு 2 அமைச்சர் பதவிகளைக் கொடுத்து கூட்டணியில் இணைத்துக் கொள்ள தவெக தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இந்தத் தகவலால் மேலும் அப்செட்டில் இருக்கும் திருமாவளவன், ஒருவேளை பாமக கூட்டணிக்குள் வந்தால், கூட்டணியை விட்டு வெளியேறவும் தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
