கார்த்திக் ஆரம்பிக்கும் புதிய திட்டம்…. ரம்யா என்ன செய்யப்போகிறார்…? விறுவிறுப்பான கார்த்திகை தீபத்தின் இன்றைய எபிசோட்..!! - cinefeeds
Connect with us

CINEMA

கார்த்திக் ஆரம்பிக்கும் புதிய திட்டம்…. ரம்யா என்ன செய்யப்போகிறார்…? விறுவிறுப்பான கார்த்திகை தீபத்தின் இன்றைய எபிசோட்..!!

Published

on

பிரபல தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியல் இன்றைய எபிசோடு ப்ரோமோவில் ரம்யாவின் முகத்திரையைக் கிழிக்க நினைக்கும் கார்த்திக் ஒரு புதிய திட்டத்தை தீட்டி இருக்கிறார். அதாவது வீட்டில் ரம்யாவிற்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் இது ரம்யாவிற்கு பிடிக்கவில்லை. தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு போன் செய்து நாளை பெண் பார்க்க வரும்போது என்னை பிடிக்கவில்லை என்று கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்த மாப்பிள்ளையும் பெண் பார்த்துவிட்டு பெண்ணை பிடிக்கவில்லை என்று கூறுகிறேன் என்று கூறுகிறார். ஆனால் திடீர் திருப்பமாக அடுத்த நாள் பெண் பார்க்க வரும் பொழுது அவர் பெண்ணை பிடித்திருக்கிறது என்று கூறுகிறார். இதனை தொடர்ந்து ரம்யாவிற்கு எதிராக கார்த்திக் குடும்பம் எடுத்த எடுக்கப் போகும் அடுத்த அதிரடி திட்டம் என்ன? என்பது குறித்து இன்றைய எபிசோடில் நடக்க இருப்பது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

 

Advertisement