LATEST NEWS
சண்முகப்பிரியா சிக்கியது எப்படி..? ரூ.100 கோடி மோசடியில் மாட்டிய சீக்ரெட் லிங்க்..! CCB தீவிர விசாரணை..!!
ரூ.100 கோடி நிதி மோசடி வழக்கு தொடர்பான சோதனையில், சண்முகப்பிரியாவின் வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கார்த்திக் என்பவரிடம் இருந்து, சண்முகப்பிரியாவின் பிசினஸ் வங்கிக் கணக்கிற்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளதை CCB வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
மேலும், மோசடி மூலம் பெறப்பட்ட முறைகேடான பணம் சண்முகப்பிரியாவின் தொழிலில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தங்களது தீவிர விசாரணையை மேலும் முடுக்கிவிட்டுள்ளனர்.
