“இறைவன் இருக்கிறான்..” நடுரோட்டில் எமனாக வந்த கன்டெய்னர் லாரி.. அப்படியே சரிந்த போது தம்பதிக்கு நிகழ்ந்த அதிசயம்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“இறைவன் இருக்கிறான்..” நடுரோட்டில் எமனாக வந்த கன்டெய்னர் லாரி.. அப்படியே சரிந்த போது தம்பதிக்கு நிகழ்ந்த அதிசயம்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

Published

on

குஜராத் மாநிலம் சூரத்தின் கபோத்ரா சிகுவாடி பகுதியில், எம்பிராய்டரி இயந்திரங்களை ஏற்றி வந்த கனரக கன்டெய்னர் லாரி ஒன்று வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கன்டெய்னர் லாரி திடீரெனச் சரிந்த அதே நொடியில், அதன் மிக அருகாமையில் மோட்டார் சைக்கிளில் கடந்து சென்ற தம்பதியினர் நூலிழையில் உயிர் தப்பினர். கண் இமைக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்த அதிர்ச்சியூட்டும் விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த திடீர் விபத்தின் காரணமாக அந்த பரபரப்பான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும், பொதுமக்கள் மத்தியில் பயமும் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடனடியாக கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை வரவழைத்தனர். ஜேசிபி உதவியுடன் நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரி அகற்றப்பட்டதை அடுத்து, போக்குவரத்து வழக்கம் போல் சீரடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித உயிர்ச்சேதமோ அல்லது கடுமையான காயங்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in