LATEST NEWS
8 சொகுசு கார்கள்.. ரூ.9.6 கோடி தங்க நகைகள்… ரூ.5,000 கோடி நிதி மோசடியில் சிக்கிய BLM பிரேம்குமார்..! ED அதிரடி வேட்டை..!!
ரூ.5,000 கோடி நிதி மோசடி தொடர்பான வழக்கில், தொழிலதிபர் BLM பிரேம்குமாருக்குச் சொந்தமான ரூ.103 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதனுடன் சேர்த்து, அவருக்குச் சொந்தமான ரூ.7 கோடி மதிப்பிலான 8 ஆடம்பரச் சொகுசு கார்கள் மற்றும் ரூ.9.6 கோடி மதிப்பிலான தங்க நகைகளையும் அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
முன்னதாக, இந்த மோசடி வழக்கு தொடர்பாக சென்னையில் அமைந்துள்ள BLM பிரேம்குமாரின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அந்த சோதனைகளின் தொடர்ச்சியாகவே தற்போது இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டு, நகைகள் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
