“2 பேர் கூட வாழந்து போர் அடிச்சுடுச்சு…” 3வது காதலனுக்காக இரண்டாவது கணவனை கொன்று பெட்டியில் அடைத்து வீசிய மனைவி… திரில்லர் படங்களையே மிஞ்சும் கொடூர சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“2 பேர் கூட வாழந்து போர் அடிச்சுடுச்சு…” 3வது காதலனுக்காக இரண்டாவது கணவனை கொன்று பெட்டியில் அடைத்து வீசிய மனைவி… திரில்லர் படங்களையே மிஞ்சும் கொடூர சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. நேஹா ராவத் என்ற பெண், தனது முதல் கணவன் உயிருடன் இருக்கும்போதே சோனு சவிதா என்ற இளைய வாலிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பின்னர், எட்டு ஆண்டுகள் கழித்து அவருடன் வாழ்வதில் விருப்பம் இழந்து, மூன்றாவது திருமணம் செய்துகொள்ளும் ஆசையில் தனது இரண்டாவது கணவனைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட சோனு சவிதாவின் உடல் ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு வெறும் 8 மணி நேரத்திற்குள் இந்த வழக்கைத் துப்பு துலக்கினர்.

Advertisement

இந்தக் கொடூரக் கொலையில் தொடர்புடைய குற்றவாளி நேஹா ராவத், அவரது புதிய காதலன் ஜிதேந்திர சிங் மற்றும் உடந்தையாகச் செயல்பட்ட தோஹித் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in