“என் புருஷன் உனக்கு கேட்குதாடி” கணவனின் காதலியை துடைப்பத்தால் அடித்து சாணியை ஊற்றிய மனைவி.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் புருஷன் உனக்கு கேட்குதாடி” கணவனின் காதலியை துடைப்பத்தால் அடித்து சாணியை ஊற்றிய மனைவி.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!

Published

on

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தனது காதல் கணவரைப் பிரித்ததாகக் கூறி 20 வயது இளம்பெண் ஒருவரை நடுரோட்டில் துடைப்பத்தால் அடித்து, அவர் மீது சாணத்தைக் கரைத்து ஊற்றிய இன்ஸ்டாகிராம் பிரபலம் உள்ளிட்ட 3 பெண்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காரைக்குடி 100 அடி சாலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி கணேசபுரத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான அபிநயா (30) என்பவரும், கவியரசன் (35) என்ற மற்றொரு இன்ஸ்டாகிராம் பிரபலமான நபரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில், கவியரசனுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் காரைக்குடியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கவியரசன் தனது மனைவியைப் பிரிந்து அந்தப் பெண்ணுடன் நெருங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அபிநயா, தன் கணவர் பிரிந்ததற்கு அந்தப் பெண்தான் காரணம் எனப் பழிவாங்கக் காத்திருந்தார்.

Advertisement

சம்பவத்தன்று, காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அந்த இளம்பெண் சென்றபோது, அபிநயா தனது சகோதரி அருணாதேவி மற்றும் தோழி பிரியாவுடன் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த துடைப்பத்தால் அந்தப் பெண்ணை அடித்துத் தாக்கியதோடு, கொண்டு வந்த சாணத்தைக் கரைத்து அவர் மீது ஊற்றிவிட்டுத் தப்பினர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸார் அபிநயா உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கவியரசனிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in