LATEST NEWS
“சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்காது” மகளிர் விடியல் பயணம் திட்டப் பெயர் மாற்ற விவகாரம்.. தவெக அரசை வெளுத்து வாங்கிய திமுக.!!
தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, முந்தைய திமுக அரசின் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயரிலிருந்து ‘விடியல்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு, ‘மகளிர் பயணம்’ என மாற்றப்பட்டுள்ளது. இதனால் அரசுப் பேருந்துகளில் பழைய ஸ்டிக்கர்களை அகற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
திமுகவின் திட்டங்களை மறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். திட்டத்தின் பெயரை மாற்றினாலும் அது திமுகவின் சாதனைதான் என்பதை வலியுறுத்தி, “சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடாது” என்ற பழமொழியைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளனர்.
பெயர் மாற்றப்பட்டாலும், பெண்களுக்குப் பயன்படும் வகையில் இத்திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. இருப்பினும், இந்த மாற்றம் தவெக-திமுக இடையே அரசியல் வார்த்தைப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது.
