LATEST NEWS
“எனக்கு போன் பண்ணி ரூ.15 கோடி பேரம் பேசினாங்க” தவெக அரசை கவிழ்க்க DMK-ADMK சதி… MLA முஸ்தபா அதிரடி குற்றச்சாட்டு..!!
தவெக அரசை கவிழ்க்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து சதிச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் தமக்கு எதிராக வாக்களிப்பதற்காக அதிமுகவினர் தன்னிடம் பெரும் தொகையை பேரம் பேசியதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொலைபேசி வாயிலாக தன்னைத் தொடர்பு கொண்ட அதிமுகவினர், முன்பணமாக 15 கோடி ரூபாயும், நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பின்னர் மேலும் 15 கோடி ரூபாயும் தருவதாகக் கூறினர் என்று முஸ்தபா குறிப்பிட்டுள்ளார். ஆனால், 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தவெக ஆட்சியை வீழ்த்த திரைமறைவில் நடக்கும் இந்த சதிச் செயல்களின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்ற முழு விவரங்கள் மற்றும் ஆதாரங்கள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் தனது பேட்டியில் எம்.எல்.ஏ முஸ்தபா எச்சரித்துள்ளார்.
