LATEST NEWS
புது போன் வாங்கிய சில மாதங்களிலேயே எமனா மாறிடுச்சே … தாயை விட்டுவிட்டு வீடு திரும்பியபோது துடிதுடித்து மரணம்.. உயிரைப் பறித்த போன் எந்த பிராண்ட்? போலீஸ் தீவிர விசாரணை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த விகாஸ் என்ற வாலிபர், தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் போன் திடீரென வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விகாஸ் அண்மையில்தான் புத்தம் புதிய மொபைல் போன் ஒன்றை வாங்கியுள்ளார். விபத்து நடந்த அன்று, அவர் தனது தாயாரை மாமா வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு, தனது பைக்கில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
விகாஸ் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, அவரது பாக்கெட்டில் இருந்த புதிய மொபைல் போன் எதிர்பாராதவிதமாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் நிலைதடுமாறி விழுந்த அவருக்குக் கடுமையான தீக்காயங்களும், காயங்களும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. விபத்து நடந்த உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதிய மொபைல் போன் வாங்கிய சில மாதங்களிலேயே அதுவே எமனாக மாறி விகாஸின் உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த விகாஸுக்கு இரண்டு சிறு குழந்தைகள் உள்ளனர். மொபைல் போன் வெடித்ததற்கான துல்லியமான காரணம் மற்றும் அது எந்த நிறுவனத்தின் மொபைல் போன் என்பது குறித்த விவரங்களைக் கண்டறியப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
