இப்படியொரு வாழ்க்கை கிடைத்தால் சொர்க்கம் தான்… இந்த வயதிலும் தாத்தா முகத்தில் சந்தோசத்தைப் பாருங்க..! – cinefeeds
Connect with us

VIDEOS

இப்படியொரு வாழ்க்கை கிடைத்தால் சொர்க்கம் தான்… இந்த வயதிலும் தாத்தா முகத்தில் சந்தோசத்தைப் பாருங்க..!

Published

on

சில தருணங்கள் தவறவிட்டு விட்டால் வாழ்வில் திரும்பவே கிடைக்காது. அப்படி ஒன்று தான் தாத்தா_பாட்டிகளோடு இருப்பது!

சின்னஞ்சிறு வயதில் குழந்தைகளுக்கான உச்சகட்ட பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் தாத்தா, பாட்டி என சொல்லிவிடலாம். தாத்தா மடியில் இருந்து கதை கேட்காத குழந்தைகளே இருக்காது. பாட்டியின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகள் தான் நாம். தாத்தாக்களின் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ முன்னாள் நின்று கொண்டு சென்ற பொடிசுகள் இங்கு அதிகம்.

Advertisement

தாத்தா, பாட்டிகளும் வீட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளின் மீது உயிரையே வைத்து உள்ளனர். ஆனால் இதெல்லாம் நம் தலைமுறையும், இந்த தலைமுறையும் அனுபவித்தது. அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது. காரணம், இன்று கூட்டு குடும்ப உறவுமுறையையே சிதைத்துவிட்டோம். கணவன், மனைவி தாண்டி தாத்தா, பாட்டிகளை பலரும் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு ரிலாக்ஸ்டாக இருக்கிறார்கள். இன்னொருபுறத்தில் இன்று கம்யூட்டர் உலகு ஆகிவிட்டது. குழந்தைகள் செல்போனிலும், மடிகணினியிலும் உலகைப் பார்க்கின்றன. இதனாலும் தாத்தா, பாட்டியின் மடியில் கிடந்து விளையாடும் வாய்ப்பை தவறவிடுகின்றனர்.

ஆனால் இன்றும் கூட்டு குடும்ப உறவை கச்சிதமாகப் பேணும் குடும்பங்களும் உண்டு. இதோ இந்த வீடும் அப்படித்தான் 90 வயதான தாத்தா வீட்டில் ஒரு சேரில் அமர்ந்திருக்க அவரது பேத்திக்கு குழந்தை பிறந்து வீட்டுக்கு வந்தாள். புதிதாகப் பிறந்திருக்கும் கொள்ளுப் பேத்தியை எடுத்துப் போய் தன் தாத்தாவின் பாதத்தில் வைத்து ஆசிவாங்கிவிட்டு மூன்று சுற்றுகள் பாதத்திலேயே சுற்றிவிட்டு அவரிடம் காட்டுகிறார். பத்து நொடிகளே ஓடக்கூடிய இந்த வீடியோ நம் மனதில் கூட்டுக்குடும்பத்தின் பெருமையை அழுத்தமாகச் சொல்லிச் செல்கிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in