LATEST NEWS
தளபதி 68 தான் கடைசி படம்… நடிப்புக்கு டாட்டா காட்டும் விஜய்?… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் திரிஷா, அர்ஜுன் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இதனிடையே சமீபத்தில் இந்த திரைப்படத்திலிருந்து முதல் பாடல் நா ரெடி தான் வரவா வெளியிடப்பட்டது. திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 வது திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் விஜய் குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் தனது 68வது படத்தை முடித்த கையோடு மூன்று ஆண்டுகள் நடிப்பதை நிறுத்தி அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. மூன்று வருடங்களுக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க வருவார் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
