LATEST NEWS
“சண்டையில் சட்டை கிடையாது”… மாறி மாறி டுவீட் போட்ட லோகேஷ் கனகராஜ், கௌதம் மேனன்…!!
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பிரபலங்கள் சில சினிமாவில் நுழைந்தோம் நடித்தோம் என இருக்கின்றனர். ஆனால் சிலர் மட்டுமே சினிமாவில் சில விஷயங்களை புகுத்த வேண்டும் என்றும் தன் படம் மூலம் அதனை காட்ட வேண்டும் என்ற புதுமையை விரும்புகின்றனர். அப்படி ஒவ்வொரு படத்திற்கும் தொழில்நுட்ப விஷயங்கள் மற்றும் கதை என வித்தியாசம் காட்டியவர் தான் நடிகர் கமல்ஹாசன்.
இவரை வைத்து சிறப்பான படத்தை கொடுக்க வேண்டும் என்று இயக்குனர்கள் பலரும் விரும்புகின்றனர். அப்படி வாய்ப்பு கிடைத்து சிறப்பாக செய்தவர்களில் லோகேஷ் கனகராஜ் மற்றும் கௌதம் மேனன் இடம் பிடித்துள்ளனர். கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் கமலின் தீவிர ரசிகர் யார் என்ற சண்டையில் முதலிடம் பிடித்தது கௌதம் வாசுதேவ் மேனன் தான் என்று தோன்றுகிறது. சாரி லோகேஷ் கனகராஜ் என்று பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் சந்தேகமே வேண்டாம் கௌதம் மேனன் தான் முதலிடம் என பதில் அளித்தார். இவரின் பதிவிற்கு கௌதம் மேனன் வெளியிட்ட twitter பதிவில், லோகேஷ் கனகராஜ் வரும்வரை அப்படி இருந்தது. ஆனால் விக்ரம் படம் வந்த பிறகு அதுதான் முதலிடம். இதைத் தாண்ட வேண்டும். இது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். ஆனால் இந்த சண்டையில் சட்டை கிடையாது அன்பு மட்டுமே என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Loads of love and respect to you sir! ❤️
Thrilled and exhilarated to see the response for the re-release of #VettaiyaaduVilaiyaadu film now, more love and power to our #Ulaganayagan @ikamalhaasan sir 🔥 #AnbeSivam https://t.co/rS37wrbCCF
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 2, 2023
