சூப்பர் ஜோடி சூர்யா – ஜோதிகாவின் காதல்… ஒரே பாட்டில் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்.. இதுவரை பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூப்பர் ஜோடி சூர்யா – ஜோதிகாவின் காதல்… ஒரே பாட்டில் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்.. இதுவரை பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள். திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சூர்யா இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சூர்யாவின் வாழ்க்கைக்கு ஒவ்வொரு இடத்திலும் சப்போர்ட்டாக இருந்தவர்தான் ஜோதிகா. இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கும் போதே காதலித்து வந்தனர். ஆனால் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க இவர்களின் காதல் இயக்குனர் பாலாவிற்கு தெரிய வந்துள்ளது.

Advertisement

அதன் பிறகு சூர்யாவின் அப்பாவிடம் பேசி காதலுக்கு சம்மதம் வாங்கியுள்ளார். ஆனால் இவர்களின் காதலை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தான். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் திருமணம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற விஷயம் தெரிந்ததும் அந்த திரைப்படத்தில் அவளுக்கு என்ன அம்பாசமுத்திரம் அல்வா மாதிரி என்ற பாடலை இருவருக்காகவும் கம்போஸ் செய்துள்ளார்.

இந்தப் பாடல் ஒரு திருமண பாடலாகவும் உருவாகி இருந்த நிலையில் இதனை சூர்யா ஜோதிகாவின் கல்யாண பரிசாக இருக்கட்டும் என்று இயக்குனரிடம் ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மூன்றே நாளில் திருமணம் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in